தமிழ்நாடு

சென்னையிலிருந்து 20% ஆம்னி பேருந்துகள் மட்டுமே இயக்கம்

DIN

இரவு நேர ஊரடங்கு காரணமாக சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு 20% ஆம்னி பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. 

தமிழகத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து ஏப்ரல் 20 முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இதையடுத்து ஊரடங்கு நேரத்தில் பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் காலை மட்டும் இயக்கப்படுகின்றன. 

பகலில் மட்டும் பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு 20% ஆம்னி பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

வழக்கமாக 700 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் தற்போது தென் மாவட்டங்களுக்கு 20% பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவிட்டுள்ளது. 

இன்று காலை சென்னையிலிருந்து மதுரை, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT