தமிழ்நாடு

கடைசிப் பேருந்து காலை 6 மணி- கன்னியாகுமரி: சென்னையிலிருந்து புறப்படும் கடைசிப் பேருந்துகளின் நேரம்

DIN

சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 20 முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்திருப்பதால், வெளியூர்களுக்குச் செல்லும் அரசு மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் பகல் நேரத்தில் இயக்கப்படுகின்றன.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை இரவு நேர பொது முடக்கமும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பேருந்துகளை இயக்கக் கூடாது என்று மாநில அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து, சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கும், பிற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கும் இயக்கப்படும் பேருந்துகள் பகல் நேரத்தில் இயக்கப்படுகின்றன. காலை 5 மணியிலிருந்தே பேருந்துகள் புறப்படத் தொடங்கி விடுகின்றன. அதேவேளையில், பேருந்துகள் அனைத்தும் சென்றடைய வேண்டிய பேருந்து முனையத்துக்கு இரவு 9 மணிக்குள் செல்ல வேண்டும் என்பதால், பயண நேரத்தைக் கணக்கிட்டு, பகல் நேரத்தில் கடைசிப் பேருந்து புறப்படும் நேரம் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அந்த வகையில், சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் கடைசிப் பேருந்துகளின் பயண விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு காலை 6 மணிக்கும், நாகர்கோவிலுக்கு காலை 7 மணிக்கும் கடைசிப் பேருந்துகள் புறப்படுகின்றன. 

தஞ்சாவூருக்கு மதியம் 1 மணிக்கும் ஒசூர், தர்மபுரிக்கு மதியம் 2 மணிக்கும் கடைசிப் பேருந்துகள் புறப்படுகின்றன.

திருச்செந்தூர், நெல்லை, தூத்துக்குடி, செங்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு காலை 8 மணிக்கு கடைசிப் பேருந்து புறப்படும், மேலும் கோவைக்கு 10.30 மணிக்கு கடைசிப் பேருந்து புறப்படுகிறது.

வேளாங்கண்ணி, சேலம், பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு மதியம் 1.30 மணியளவிலும், திருச்சிக்கு மதியம் 2.25 மணியளவிலும் கடைசிப் பேருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக காஞ்சிபுரம், செய்யாறு, ஆற்காடு, திருத்தணி, திருப்பதி ஆகிய ஊர்களுக்கு இரவு 6 மணிக்கு கடைசிப் பேருந்துகள் புறப்படுகின்றன.

சென்னையிலிருந்து புறப்படும் கடைசிப் பேருந்துகளின் நேரம் அட்டவணையில் விளக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT