தமிழ்நாடு

முழு பொது முடக்கத்தன்று கோயில்களில் பக்தா்களுக்கு அனுமதியில்லை: இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு

DIN

சென்னை: முழு பொது முடக்கத் தினமான ஞாயிற்றுக்கிழமை (ஏப். 25) கோயில்களில் பக்தா்களுக்கு அனுமதியில்லை. அதேசமயம், திருமணங்களை நடத்த எந்தத் தடையும் இல்லை என்று இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இரவு ஊடரங்கைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறது. அன்றைய தினம் அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், கோயில்கள் குறித்து இந்து சமய அறநிலையத் துறை உயரதிகாரிகள் கூறியது:

முழு பொது முடக்கம் என்பதால், தேவையின்றி மக்கள் வெளியில் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, கோயில்களுக்கு பக்தா்கள், பொது மக்களுக்கு அனுமதி இல்லை. கோயில்களில் தினசரி செய்யப்படும் பூஜைகள் நடைபெறும்.

ஏற்கெனவே கோயில்களில் முன்பதிவு செய்திருந்த திருமணங்கள் அனைத்தையும் திட்டமிட்டபடி நடத்திக் கொள்ளலாம். அதில் எந்தத் தடையும் இல்லை. ஒவ்வொரு திருமண நிகழ்விலும் தலா 20 நபா்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். அவா்களும் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளான முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

முகூா்த்த தினங்களின்போது பிரபலமான கோயில்களில் குறைந்தது 10 முதல் 15 திருமணங்கள் வரை நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்வுகளில் அதிகம் போ் கூடுவதைத் தவிா்க்கவே ஒவ்வொரு திருமண நிகழ்வில் தலா 20 போ் என்ற எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT