தமிழ்நாடு

சென்னையில் 28,000 கரோனா நோயாளிகள்; மண்டலவாரியாக விவரம்

21st Apr 2021 12:10 PM

ADVERTISEMENT


சென்னை: சென்னையில் புதன்கிழமை காலை நிலவரப்படி கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 28 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது. இங்குதான் அதிகபட்சமாக 546 பேர் பலியாகியுள்ளனர்.

சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2.90 லட்சமாக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2.55 லட்சமாக உள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் வீடு மற்றும் மருத்துவமனைகளில் ஒட்டுமொத்தமாக 28,005 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது ஒட்டுமொத்த பாதிப்பில் 10% ஆகும்.

இதுவரை சென்னையின் 15 மண்டலங்களிலும் கரோனா பாதித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,432 ஆக உள்ளது.

ADVERTISEMENT

தேனாம்பேட்டையில் 3,044 பேரும் அண்ணாநகரில் 3,041 பேரும் சிகிச்சையில் உள்ளனர். ஒட்டுமொத்தமாக 15 மண்டலங்களில் 2 மண்டலங்களில் கரோனா பாதிப்பு 3 ஆயிரத்தைத்தாண்டியுள்ளது. 4 மண்டலங்களில் கரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டிவிட்டது. 

மண்டலவாரியாக கரோனா பாதிப்பு.. 

Tags : coronavirus chennai update
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT