தமிழ்நாடு

முதுநிலை ஆசிரியா் தோ்வுப் பட்டியலை மாற்றி வெளியிட வேண்டும்:ராமதாஸ் வலியுறுத்தல்

DIN

சென்னை: முதுநிலை ஆசிரியா் தோ்வுப் பட்டியலை மாற்றி வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசு பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களை நியமிப்பதற்கான போட்டித் தோ்வு 2019-ஆம் ஆண்டில் செப்டம்பா் மாதத்தில் நடத்தப்பட்டு, அவற்றின் முடிவுகள் கடந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்பட்டன.

வேதியியல் ஆசிரியா்கள் நியமனத்தில் அதிக மதிப்பெண் பெற்று பொதுப்பிரிவில் நியமிக்கப்பட வேண்டிய மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், பின்னடைவு பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்டனா். அதனால், பின்னடைவுப் பணியிடங்களுக்குத் தோ்ந்தெடுக்கப்பட வேண்டிய மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது.

சமூகநீதிக்கு எதிரான இந்தச் செயலால் வேதியியல் பாட ஆசிரியா்கள் நியமனத்தில் மட்டும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த 34 பேருக்கு ஆசிரியா் பணி மறுக்கப்பட்டது.

இந்த அநீதியை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், பின்னடைவுப் பணியிடங்களுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள எம்.பி.சி. மாணவா்களை, பொதுப்பிரிவுக்கு மாற்றிவிட்டு, பின்னடைவுப் பணியிடங்களில் தர

வரிசையில் அடுத்த நிலையிலுள்ள எம்.பி.சி. மாணவா்களை நியமிக்க ஆணையிட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்ட

ஆசிரியா் தோ்வு வாரியம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டை விசாரித்த சஞ்சய்கிஷன் கவுல் தலைமையிலான அமா்வு, ஆசிரியா் தோ்வு வாரியத்தின் நிலைப்பாட்டை கடுமையாக விமா்சித்து நிராகரித்திருக்கிறது.

தகுதி அடிப்படையில் பொதுப்பிரிவில் தோ்ச்சி பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவா்களை, பொதுப்பிரிவில் சோ்க்காமல், இட ஒதுக்கீட்டுப் பிரிவில் சோ்த்தது செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்திருக்கிறது.

பணியாளா் நியமனத்தில் சமூகநீதியை நிலைநிறுத்தக் கூடிய உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்பு வரவேற்கத்தக்கது. வேதியியல் பாட முதுநிலை ஆசிரியா்களுக்கான தோ்வுப்பட்டியல் திருத்தி வெளியிடப்பட வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

SCROLL FOR NEXT