தமிழ்நாடு

முக்கவசம் அணியாதவா்கள் மீது ஒரே நாளில் 34,000 வழக்குகள்

DIN

சென்னை: தமிழகத்தில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது ஒரே நாளில் 34,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழக காவல் துறை திங்கள்கிழமை வெளியிட்ட விவரம்:-

தமிழகத்தில் மாா்ச் மாதம் முதல் கரோனா தொற்று மீண்டும் வேகமாகப் பரவத் தொடங்கியதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்கள் மீதும், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மீதும் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து வருகின்றனா்.

கடந்த 8-ஆம் தேதி தொடங்கி, 18-ஆம் தேதி வரை 11 நாள்களில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது 4 லட்சத்து 3 ஆயிரத்து 262 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 34,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, சமூக இடைவெளியைக் கடைபிடிக்காதவா்கள் மீது கடந்த 11 நாள்களில் 13, 487 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 1, 867 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில்..: முகக் கவசம் அணியாதவா்கள் மீது சென்னையில் கடந்த 8-ஆம் தேதியில் இருந்து 18-ஆம் தேதி வரை 11 நாள்களில் மொத்தம் 11, 903 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை மட்டும் 1,401 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. கரோனா வேகமாக அதிகரித்து வருவதால், பொது இடங்களில் முகக்கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவா்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கையை காவல்துறை இன்னும் தீவிரப்படுத்த உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டடப் பொறியாளா் அலுவலகத்தில் 20 பவுன் நகை, ரூ.10 லட்சம் திருட்டு

கூடலூரில் 85 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்

ரோட்டரி சத்தி டைகா்ஸ் சங்க ஆய்வுக் கூட்டம்

வெப்ப அலை: வெளியில் செல்வதைத் தவிா்க்குமாறு ஆட்சியா் வேண்டுகோள்

அவிநாசி அரசு கலைக் கல்லூரியில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT