தமிழ்நாடு

சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை: வெறிச்சோடிய ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி

20th Apr 2021 12:40 PM

ADVERTISEMENT

 

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சுற்றுலாப் பயணிகள் வரை மாவட்ட நிர்வாகம் தடை விதித்ததால், செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் இன்றி ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழகத்தின் முதன்மை சுற்றுலாத் தலமாக விளங்கும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி பகுதிக்கு தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகம் ,ஆந்திரம், கேரளம் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லுகின்றனர். 

ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருவதால் நாளுக்கு நாள் தொற்றின்  அளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில் வெளிமாநிலத்திலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம், பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல், பேருந்துகளில் குறைந்தளவிலான பயணிகளே அனுமதித்தல், சுற்றுலாத் தளங்களுக்கு அனுமதி மறுப்பு, இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. 

இந்த தடுப்பு நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வருவதால், ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சுற்றுலாப் பயணிகள் வரத் தடை விதிப்பதாக தர்மபுரி மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. 
இதனால் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை காவல்துறையினர் மடம் சோதனைச்சாவடி மற்றும் ஒகேனக்கல் காவல் நிலையம் பகுதியில் தற்காலிக தடுப்புகள் அமைத்துப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை இல்லாததால் பிரதான அருவி நடைபாதை ,பரிசல் துறைகள், மீன் விற்பனை நிலையங்கள் ,பேருந்து நிலையம் முதலைகள் மறுவாழ்வு மையம், வண்ண மீன்கள் காட்சியகம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. 

சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி பகுதியில் நுழைவதைத் தவிர்க்கும் வகையில் ஆலாம்பாடி, ஒகேனக்கல் மூன்று சாலை சந்திப்பு பகுதி மற்றும் நீர்வீழ்ச்சி பகுதிக்குச் செல்லும் நடைபாதை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் வராததால், ஒகேனக்கலில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

Tags : ஒகேனக்கல்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT