தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு

DIN

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,499 கன அடியாக அதிகரித்துள்ளது.

கடந்த இரண்டு நாள்களாக காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது.

நேற்று காலை வினாடிக்கு 216 கன அடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 1499 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு  ஆயிரம் கன அடி வீதம் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நேற்று காலை 97.54அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 97.55அடியாக உயர்ந்துள்ளது. 

அணையின் நீர் இருப்பு 61.71 டி.எம்.சியாக இருந்தது.மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் சரிவில் இருந்து மீண்டு உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT