தமிழ்நாடு

கூத்தாநல்லூர்: 24 வார்டுகளிலும் தீவிர கண்காணிப்பு

DIN

திருவாருர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சி 24 வார்டுகளையும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என ஆணையர் ஆர்.லதா தெரிவித்தார். 

சீனாவில் கருவாகி, உருவாகி, வளர்ந்த கரோனா தொற்று ஒரு வயதைக் கடந்து விட்டது. கடந்த ஆண்டைப் போல் இல்லாமல், தற்போது, வீரியம் எடுத்த கரோனாவாக உருமாறி, பேரழிவை எதிர்நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. கரோனா தடுப்பு ஊசி போடப்பட்டும் வருகிறது. இருந்தாலும், அதையும் தாண்டி கரோனா சீற்றம் கொண்டுள்ளது. 

கூத்தாநல்லூர் நகராட்சி சில மாதங்கள் கரோனா தொற்றே இல்லாத நகராட்சியாக கூத்தாநல்லூர் நகராட்சி இருந்தது. இந்நிலையில், நகராட்சியில், 2ஆம் அலையில் மீண்டும் தத்தளிக்கத் தொடங்கி விட்டது.

இதுகுறித்து மேலும், ஆணையர் லதா கூறியது,

கூத்தாநல்லூர் நகராட்சியின் 24 வார்டுகளையும் தீவிர கண்காணிக்கப்பட்டு வருகிறது. 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி முதல், இன்று 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி வரையிலும், நகராட்சியில் 217 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று 197 பேர் வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் இறந்து விட்டனர். தற்போது, 13 பேர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கூத்தாநல்லூர் நகராட்சியில், பெரியக் கடைத்தெரு, சின்னக் கடைத்தெரு, மரக்கடை, ரேடியோ பார்க், மேலத்தெரு, சவுக்கத் அலி தெரு, பனங்காட்டாங்குடி, கம்பர் தெரு, கொரடாச்சேரி பிரதான சாலை, திருவாரூர் பிரதான சாலை, வடபாதிமங்கலம் பிரதான சாலை உள்ளிட்ட அனைத்து தெருக்களிலும் கரோனா தொற்று ஏற்படாதவாறு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டும், ப்ளீச்சிங்  பவுடர் தூவப்பட்டும் வருகிறது. 

கரோனா தொற்று ஏற்பட்டுள்ள வீடுகள், அருகில் உள்ள வீடுகள் என அப்பகுதிகளில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், காவல் நிலையம் அருகேயுள்ள பகுதியில் 5 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியை தகரம் வைத்து அடைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு பகுதியாக்கப்பட்டுள்ளன. கரோனாவிலிருந்து உயிரைப் பாதுகாக்க தடுப்பு ஊசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும், கரோனா தொற்று வராமல் தடுக்க, அனைவரும் முகக்கவசம் அணியவும், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தமாகக் கழுவவும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது என ஆணையர் லதா தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

SCROLL FOR NEXT