தமிழ்நாடு

காஞ்சிபுரம் அருகே 7 பசுமாடுகள் சாவு

DIN

காஞ்சிபுரம் அருகே சிங்கடிவாக்கம் ஊராட்சிக்கு உள்பட்ட மதுரமேட்டூரில் 7 பசுமாடுகள் இறந்தது தொடர்பாக கால்நடை மருத்துவக்குழுவினர் நேரில் பார்த்து விசாரணை மேற்கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கடிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மதுரமேட்டூரைச் சேர்ந்த 7 பசுமாடுகள் திங்கள்கிழமை வயலில் மேய்ந்து கொண்டிருந்தன.அவை இரவு வெகுநேரம் ஆகியும் திரும்பவில்லை. காலையில் பசுமாடுகளின் உறவினர்கள் மாடுகளைத் தேடிசென்ற போது அவை வயலில் இறந்து கிடந்தன.

இது குறித்து சிங்கடிவாக்கம் ஊராட்சியில் உள்ள அப்துல்கலாம் மக்கள் சேவை மன்றத்தின் செயலாளர் ஞானவேல் கூறுகையில்,

மொத்தம் 7 பசுமாடுகள் உயிரிழந்துள்ளன. இதில் ரவி 2, கண்ணன் 2, கோபால், குமார், நாகேஸ்வரி ஆகியோருக்கு சொந்தமான பசுமாடுகள் தலா 1 உள்பட மொத்தம் 7 பசுமாடுகள் உயிரிழந்து கிடந்தன.

இத்தகவல் உள்ளூர் கிராம நிர்வாக அலுவலருக்கு தெரியப்படுத்தப்பட்டு பின்னர் கால்நடை மருத்துவக்குழுவினர் நேரில் வந்து பார்த்து ஆய்வு செய்தனர். என்ன காரணத்தால் பசுமாடுகள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தன என்ற விபரம் மருத்துவக் குழுவினரின் ஆய்வுக்குப் பிறகே தெரிய வரும் எனவும் ஞானவேல் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆதரவு வாக்காளரின் பெயர்கள் நீக்கம்: அண்ணாமலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நீலக்குயிலே... நீலக்குயிலே! வேதிகா...

வாக்களித்த தலைவர்கள்!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

SCROLL FOR NEXT