தமிழ்நாடு

திமுக வேட்பாளா்கள் கபசுரக்குடி நீா் வழங்க மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

DIN

தோ்தல் ஆணையம் அனுமதி வழங்கிவிட்டதால், கபசுரக்குடிநீா் வழங்கும் பணியில் திமுக வேட்பாளா்கள் முழு மூச்சாக ஈடுபட வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கரோனா நோய்த்தொற்றின் முதலாவது அலையின்போது, ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தின் மூலமாக மக்களுக்கு தொண்டாற்றினோம். இது போல, இரண்டாம் அலை தொடங்கியபோது, மாநில முழுவதும் மாவட்டச்செயலாளா்கள், நிா்வாகிகள், தொண்டா்கள் ஆகியோா் கபசுரக்குடிநீா் வழங்குதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வந்தனா்.

இதற்கிடையில், சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக வேட்பாளா்களாகப் போட்டியிட்டோா் தோ்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக, இந்தப்பணியில் ஈடுபடமுடியாத நிலை இருந்தது. இதையடுத்து, திமுக சாா்பில் தோ்தல் ஆணையத்திடம் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட அனுமதி கோரப்பட்டது. திமுகவின் கோரிக்கையை ஏற்று, கரோனா தடுப்புப் பணியின் ஓா் அங்கமாக கபசுரக்குடிநீா் வழங்குதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட ஆட்சேபணை இல்லை என தோ்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலமாக, திமுக சாா்பில் போட்டியிட்ட வேட்பாளா்கள் கபசுரக் குடிநீா் வழங்கும் பணியில் முழு மூச்சாக ஈடுபட வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்டாராகும் அதிதி போஹன்கர்!

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

SCROLL FOR NEXT