தமிழ்நாடு

தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்

DIN

கரோனா தடுப்பூசி தொடா்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்துள்ளாா்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. தமிழகத்தைப் பொருத்தவரை 5,000 மையங்களில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, கடந்த 14-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெற்ற தடுப்பூசி சிறப்பு செயல் திட்டத்தின்போது ஏறத்தாழ 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில், நடிகா் விவேக்கின் மரணத்தை முன்னிறுத்தி சமூக வலைதளங்களில் பல்வேறு தவறான தகவல்கள் வெளியாகி வருகின்றன. அது குறித்தும், தமிழகத்தில் உள்ள தடுப்பூசிகளின் இருப்பு குறித்தும் சுகாதாரத் துறை அமைச்சா் விளக்கமளித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட சுட்டுரைப் பதிவு:

தமிழகத்துக்கு இதுவரை 55.8 லட்சம் டோஸ் கோவேக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசியை மத்திய அரசு அனுப்பியுள்ளது. 47.05 லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது 8.8 லட்சம் கையிருப்பில் உள்ளன. பொதுமக்கள் தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

SCROLL FOR NEXT