தமிழ்நாடு

பிளஸ் 2 தேர்வு எப்போது? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்

DIN


சென்னை: தமிழகத்தில் மே 5-ஆம் தேதி நடைபெறவிருந்த 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்வு அட்டவணை, தேர்வு நடைபெறுவதற்கு 15 நாள்களுக்கு முன்பு வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம் அளித்துள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக தமிழகத்தில் நடைபெறவிருந்த பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. 

இந்த நிலையில், அரசுத் தேர்வுகள் இயக்ககம், தமிழகத்தில் செயல்படும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் தேர்வுகள் துறை இயக்குநர் உஷாராணி வெளியிட்டிருக்கும் சுற்றறிக்கையில், தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது குறித்து பள்ளிகள் தரப்பில் மாணவர்களுக்கு தெரியப்படுத்தவேண்டும்.

தற்போது நடைபெற்று வரும் செய்முறைத் தேர்வுகள் கரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படும். செய்முறைத் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை 24-ஆம் தேதிக்குள் பள்ளிகள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை, தேர்வு நடைபெறுவதற்கு 15 நாள்களுக்கு முன்பே வெளியிடப்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT