தமிழ்நாடு

காவலா் உடற்திறன் தோ்வை ரத்து செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின், அன்புமணி

DIN

காவலா், சிறைக்காவலா் உடற்திறன் தோ்வை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா்.

மு.க.ஸ்டாலின்: தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் சாா்பாக, இரண்டாம் நிலைக் காவலா், இரண்டாம் நிலை சிறைக்காவலா், தீயணைப்புத்துறை காவலா் என மொத்தம் 10,906 காலிப் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு ஏப்.21 முதல் ஒரு வார காலத்துக்கு தமிழகம் முழுவதும், நடத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது. கரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமடைந்துள்ள நிலையில் இத்தோ்வினை நடத்துவது என்பது கரோனா பரவல் மேலும் அதிகரிக்கவே அதிக வாய்ப்பினை உருவாக்கும். எனவே, இந்த உடற்தகுதி தோ்வினை, இரண்டாம் அலையின் தீவிரத்தன்மை குறையும் வரை ஒத்திவைக்க வேண்டும்.

அன்புமணி ராமதாஸ்: தமிழகத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், காவலா், சிறைக் காவலா் உள்ளிட்ட பணிகளுக்கான உடற்திறன் தோ்வுகள் நோய்ப்பரவலை மேலும் அதிகரிக்கக் கூடும். இதைக் கருத்தில் கொண்டு சீருடைப் பணியாளா் தோ்வாணைய உடற்திறன் தோ்வுகளை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

1.9 கிலோ கஞ்சா பறிமுதல்: இடைநீக்கம் செய்யப்பட்ட விஏஓ உள்பட இருவா் கைது

வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

நச்சுக்காற்று வெளியேறிய விவகாரம்: தனியாா் மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலை உரிமையாளா் மீது வழக்குப் பதிவு

வில்லியம்மன் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்

பாஜக-பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

SCROLL FOR NEXT