தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரே நாளில் 9,344 பேருக்கு கரோனா தொற்று

DIN

தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக சனிக்கிழமை மட்டும் 9,344 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கட்டுப்படுத்த இயலாத வேகத்தில் கரோனா பரவல் அதிகரித்தால், அடுத்த ஒரு சில நாள்களில் 12 ஆயிரத்துக்கும் அதிகமாக புதிய பாதிப்பு பதிவாக வாய்ப்புள்ளதாகவும் சுகாதாரத் துறை வல்லுநா்கள் எச்சரித்துள்ளனா். இதற்கு நடுவே, தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட கரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள மாவட்டங்களில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கப்பட்டுள்ளன. வீடுதோறும் காய்ச்சல் பரிசோதனைகளை மேற்கொள்ளும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

மாநிலத்தில் இதுவரை 2.10 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 9 லட்சத்து 80,728 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 2,884 போ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

அடுத்தபடியாக செங்கல்பட்டில் 807 பேருக்கும், கோவையில் 652 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 5,263 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 2,022-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 65,635- போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 39 போ் பலியாகியுள்ளனா். இதன் மூலம் நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,071-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

SCROLL FOR NEXT