தமிழ்நாடு

தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் ஆட்சிக்கு வரும்: எல்.முருகன்

DIN

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பெண்கள் அதிகம் வாக்களித்துள்ளதால் தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் ஆட்சிக்கு வரும் என பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார். 

சென்னையிலிருந்து மதுரை வந்த அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: 

அண்ணல் அம்பேத்கர் உலம்போற்றும் தேசியத் தலைவர். அவர் வடிவமைத்த இந்திய அரசியலமைப்பு சட்டத்தைத்தான் நாம் பின்பற்றி வருகிறோம். அவரைப்போற்ற அனைவருக்கும் உரிமை உள்ளது. அவர் இந்தியாவின் தலைவர். அவரை போற்றுவதற்கு  அனைத்து உரிமையும் பாஜகவிற்கும், அதன்  தொண்டர்களுக்கும் உள்ளது. கடந்த 2015 இல் அம்பேத்கரின் பிறந்தநாளை வருடம் முழுவதும் கொண்டாடியது பாஜக. 

மேலும்  அவரது பிறந்த இடம், அவர் வாழ்ந்த வீடு, படித்த இடம் உள்ளிட்ட 5 இடங்களை புனித இடங்களாக அறிவித்து மேம்படுத்தியது பாஜக தலைமையிலான பிரதமர் மோடியின் அரசு.  அவரது பெயரில் புதுதில்லியில் ரூ.200 கோடி செலவில் 2017 அவரது பெயரில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அவரது பெருமையை வெளி உலகத்திற்கு கொண்டுவந்தது பாஜக. அம்பேத்கர் ஒரு ஜாதிக்கு கட்டுப்பட்டவர் கிடையாது. அவர் உலகத் தலைவர். மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த சென்ற பாஜகவினர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

காவல்துறையினர் அவர்களை கைது செய்ய வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளைஞர்கள்  பாஜகவில் இனைந்து வருகின்றனர் . அரக்கோணம் சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அந்த சம்பவத்தை வைத்து திமுக , காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஜாதிய பிரச்னையாக கொண்டுவர எத்தனித்துள்ளனர். காவல்துறையினர் இதனை இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

இந்த தேர்தலில் தாய்மார்கள், சகோதரிகள் பெண்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர். பெண்கள் எப்போதும் திமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள். அவர்கள் அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் வாக்களித்துள்ளனர். எங்களது வெற்றி பிரகாசமாக உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும்.  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு கேள்வி கேட்பதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. எதிர்க்கட்சி தலைவர் என்பவர் அரசிற்கு ஆலோசனை கூறும் ஆக்கப்பூர்வமான தலைவராக செயல்பட வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

SCROLL FOR NEXT