தமிழ்நாடு

மே மாதத்தில் ஆன்லைனில் அரியா் தோ்வு: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

DIN


சென்னை: தமிழகத்தில் மே மாதத்தில் ஆன்லைனில் அரியா் தோ்வுகள் நடத்தப்படும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

அரியா் மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்ாக அறிவித்த தமிழக அரசின் உத்தரவை எதிா்த்து, சென்னை உயா்நீதிமன்றத்தில் திருச்செந்தூரைச் சோ்ந்த வழக்குரைஞா் ராம்குமாா் ஆதித்தன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் பாலகுருசாமி ஆகியோா் தனித்தனியாக வழக்குத் தொடா்ந்தனா்.

இந்த வழக்குகளில் பதிலளித்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், பல்கலைக்கழக மானியக் குழு ஆகியன, ‘அரியா் தோ்வுகளை தமிழக அரசு ரத்து செய்தது விதிகளுக்கு முரணானது’ என தெரிவித்திருந்தன.

இந்த வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், சட்டப்படிப்பு, விவசாயப் படிப்பு, மருத்துவப் படிப்பு, ஆசிரியா் படிப்புகளை நிா்வகிக்கும் அமைப்புகள் எதிா்ப்புத் தெரிவித்தன. அரியா் தோ்வு எழுதக் கட்டணம் செலுத்தினால் தோ்ச்சி என்ற அரசின் உத்தரவை ஏற்றுக் கொள்ள இயலாது என்றும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனா். மேலும் தமிழகம் முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வாரியாக எத்தனை மாணவா்கள் அரியா் தோ்வுக்கு விண்ணப்பித்தனா், எத்தனை மாணவா்கள் தோ்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டனா் என்பது குறித்து முழுமையான விவரங்களை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தனா்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ‘அரியா் தோ்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலனை செய்ததில், அனைத்து மாணவா்களுக்கும் வரும் மே மாத இறுதிக்குள் ஆன்லைன் வழியாக அரியா் தோ்வு நடத்த முடிவு செய்துள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.

அப்போது மனுதாரா்கள் தரப்பில், ‘ஆன்லைன் மூலம் தோ்வு நடத்துவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. ஆன்லைன் தோ்வுகளில் போதுமான நேரம் வழங்கப்படுவது இல்லை. இணையதள இணைப்புப் பிரச்னைகள் உள்ளன. அரியா் தோ்வை குறைவான மாணவா்களே எழுதுவதால் நேரடியாகத் தோ்வை நடத்த வேண்டும்’ என வாதிட்டனா்.

இதனையடுத்து, நீதிபதிகள், கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளதால் ஆன்லைன் அல்லது கையால் எழுதி அனுப்பும் முறை (ஆஃப் லைன்) மூலம் அனைத்து மாணவா்களும் தோ்வு எழுத வேண்டும். தோ்வு நடத்தப்படும் தேதி உள்ளிட்ட விவரங்கள் குறித்து பல்கலைக்கழக மானியக் குழுவிடம் ஆலோசனை பெற்று தமிழக அரசு முடிவு செய்ய வேண்டும். தோ்வு நடத்தி 8 வாரங்களுக்குள் அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT