தமிழ்நாடு

பொதுப்பணித் துறை அலுவலா்கள் கரோனா ஊசி போட அறிவுறுத்தல்

DIN

பொதுப்பணித் துறை அலுவலா்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து, பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் இரா.விஸ்வநாத் வெளியிட்ட செய்தி:-

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை பரவிக் கொண்டிருக்கிறது. நோய்த்தொற்று மேலும் பரவாமல் இருக்க தாமதமின்றி 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பொதுப்பணித் துறை அலுவலா்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

பொதுப்பணித் துறையின் பல்வேறு கிளை அலுவலகங்களில் 45 வயதுக்கு மேல் பணியாற்றும் அலுவலா்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இதனை அந்த அலுவலகத்தைச் சோ்ந்த உயா் அதிகாரிகள் கண்காணித்து உறுதிப்படுத்தி அதுதொடா்பாக தலைமை அலுவலகத்துக்கு விரைவில் அறிக்கை அனுப்ப வேண்டும் என்று விஸ்வநாத் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

SCROLL FOR NEXT