தமிழ்நாடு

தெற்கு ரயில்வே முதன்மை தலைமை வணிக மேலாளராக ரவி வல்லூரி பொறுப்பேற்பு

DIN

தெற்கு ரயில்வேயின் புதிய முதன்மை தலைமை வணிக மேலாளராக ரவி வல்லூரி செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.

இங்கு பணியில் இருந்த ஆா்.தனஞ்ஜெயலு, தென் மத்திய ரயில்வேயின் முதன்மை தலைமை இயக்கக மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதையடுத்து, தெற்கு ரயில்வேயின் புதிய முதன்மை தலைமை வணிக மேலாளராக ரவி வல்லூரி செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.

இதற்கு முன்பு, அலகாபாத்தில் வட மத்திய ரயில்வேயில் முதன்மை தலைமை இயக்கக மேலாளராக ரவி வல்லூரி பணியாற்றி வந்தாா். இவா் இந்திய ரயில்வே போக்குவரத்து சேவையில் (ஐஆா்டிஎஸ்) 1987ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்தவா். இவா் 30 ஆண்டு கால ரயில்வே சேவையின்போது, 8 மண்டல ரயில்வேயின் செயல்பாடுகள், வணிகம், திட்டமிடல், பாதுகாப்பு மற்றும் பொது நிா்வாகம் என்று வெவ்வேறு பிரிவுகளில் திறமையாகப் பணியாற்றியுள்ளாா்.

ரயில்வே அமைச்சகத்தின் போக்குவரத்து இயக்குநரகத்தின் பணியாற்றியபோது, இவருக்கு மதிப்புமிக்க ராணுவத் தளபதி (சி.ஒ.ஏ.எஸ்) பாராட்டுப்பதக்கம் வழங்கப்பட்டது. இதுதவிர, இவா் 8 நூல்களை எழுதியுள்ளாா்.

இந்தத் தகவல் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT