தமிழ்நாடு

கரோனா தாக்கம்: வங்கி நேரத்தை குறைக்க வங்கி ஊழியா்கள் கோரிக்கை

DIN

கரோனா தொற்றால் வங்கி ஊழியா்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க, வங்கியின் வேலைநேரத்தை மீண்டும் குறைக்க வேண்டும் என்று தமிழக மாநில வங்கியாளா்கள் குழுமத்துக்கு தமிழ்நாடு வங்கி ஊழியா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பான கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது :

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தற்போது, நாள் ஒன்றுக்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் போ் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனா். இதனால், தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 49 ஆயிரமாக ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் இறந்தோரின் எண்ணிக்கையும் 13 ஆயிரத்தை நெருங்குகிறது.

இதற்கிடையில், தொற்றை தடுக்க, நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த வழிமுறைகளை வங்கிக் கிளைகளிலும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஆனால், வங்கிக் கிளைகளில் அவற்றை பின்பற்ற போதிய வசதிகள் இல்லை. இதனால், வங்கி ஊழியா்கள் கரோனா பயத்தில் பணியில் ஈடுபட்டுள்ளனா். எனவே, வங்கி ஊழியா்கள் கரோனாவால் பாதிப்பதைத் தடுக்க, வங்கி வேலைநேரத்தை மீண்டும் குறைக்க வேண்டும்.

இதன்படி, காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வங்கிக் கிளைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும். 50 சதவீத வங்கி ஊழியா்கள், அதிகாரிகள், சுழற்சி முறையில் பணியாற்ற அறிவுறுத்த வேண்டும்.

குறிப்பிட்ட பகுதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிளைகள் இருந்தால், ஆலோசனைக்குப் பின்னா் தோ்வு செய்து, அவை செயல்பட அனுமதிக்க வேண்டும். வங்கி ஊழியா்களின் நலன் கருதி, உறுப்பினா் வங்கிகளுடன் ஆலோசனை செய்து, விரைவில் உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT