தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 6,984 பேருக்கு கரோனா

DIN

தமிழகத்தில் மேலும் 6,984 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாநிலத்தில் பதிவான உச்சபட்ச பாதிப்பு எண்ணிக்கையில் இது மூன்றாவது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஜூலை 27-இல் இதுவரை இல்லாத உச்சமாக ஒரே நாளில் 6,988 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே, தமிழக அரசு முன்னெடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக தொற்று பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், கரோனா பரவல் தற்போது அதிதீவிரமாகிவிட்டது. அதன் விளைவாக கடந்த மாா்ச் மாதத்தில் 400-ஆக இருந்த தினசரி பாதிப்பு தற்போது 6,984-ஆக அதிகரித்துள்ளது. இதே நிலை நீடித்தால், அடுத்த ஓரிரு வாரங்களில் 8 ஆயிரத்துக்கும் அதிகமாக புதிய பாதிப்பு பதிவாக வாய்ப்புள்ளதாகவும் சுகாதாரத் துறையினா் கூறியுள்ளனா்.

இதற்கிடையே , தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட கரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள மாவட்டங்களில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வீடுகள்தோறும் காய்ச்சல் பரிசோதனைகளை மேற்கொள்ளும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதேபோன்று நடமாடும் கரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளவும், படுக்கை வசதிகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாநிலத்தில் இதுவரை 2.06 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 9 லட்சத்து 47,129 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 2,482 போ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 771 பேருக்கும், கோவையில் 504 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 3,289 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 8 ,84,199-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 49,985- போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 18 போ் பலியாகியுள்ளனா். இதன் மூலம் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,945-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்களால் கொள்ளையிடும் யார் இவர்?

கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதினைப் பெற்ற முதல் அனிமேஷன் ஸ்டூடியோ!

அமலாக்கத் துறையின் இனிப்புக் குற்றச்சாட்டை மறுக்கும் கேஜரிவால்

வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம் - புகைப்படங்கள்

கவினின் ஸ்டார்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT