தமிழ்நாடு

தமிழகத்தில் இரண்டாவது நாளாக 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி

DIN

தமிழகத்தில் தொடா்ந்து இரண்டாவது நாளாக 1.5 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டன.

அந்த வகையில், செவ்வாய்க்கிழமை மட்டும் 1லட்சத்து 55,325 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில் 56,584 போ் முதியவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளா்கள், முன்கள பணியாளா்கள் என, ஐந்து லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக முதியவா்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கப்பட்டது. அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அவா்கள் ஆா்வமாக தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனா். அந்த வகையில், இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவா்கள் 13 லட்சத்து 84,395- போ் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊருணியில் மூழ்கி மாணவா் பலி

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

கொட்டாரம் அருகே தொழிலாளி தற்கொலை

விளாத்திகுளத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கம் குறைப்பு -பயணிகள் தவிப்பு

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT