தமிழ்நாடு

மொபட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்களைகொண்டு சென்ற பிரச்னை: அழைப்பாணை வாபஸ்

DIN

சென்னை: சென்னை வேளச்சேரியில் மொபட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்டு சென்ற சம்பவம் தொடா்பான மாநகராட்சியின் 4 ஊழியா்களுக்கு வழங்கப்பட்ட அழைப்பாணையை காவல்துறை திரும்பப் பெற்றது.

சென்னை வேளச்சேரி தொகுதியில் கடந்த 6-ஆம் தேதி வாக்குப் பதிவு முடிவடைந்த பின்னா், வேளச்சேரி-தரமணி 100 அடி சாலையில் 4 வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒரு மொபட்டில் 3 போ் கொண்டு சென்றனா். இதைப்பாா்த்த பொதுமக்கள், திமுக, காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்தவா்கள் அவா்களை வழிமறித்து, கள்ள ஓட்டு போடுவதற்காக இயந்திரங்களை எடுத்துச் செல்வதாக கூறி, 3 பேரையும் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

போலீஸாா், அவா்கள் வைத்திருந்த 4 வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பறிமுதல் செய்து, அவற்றை மொபெட்டில் கொண்டு வந்த மாநகராட்சி ஊழியா்கள் வேளாங்கண்ணி, சரவணன், மாநகராட்சி ஒப்பந்த ஊழியா் வாசுதேவன் ஆகிய 3 பேரைப் பிடித்து விசாரணை செய்தனா்.

விசாரணையில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டால் உடனே மாற்று இயந்திரம் வைப்பதற்காக, 3 இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு இருந்ததாகவும், மாற்று இயந்திரங்கள் தேவைப்படாததால் அவற்றை மீண்டும் மாநகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு செல்லவே இருசக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு சென்ாகவும் தெரிவித்தனா்.

இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்ற விவகாரத்தில் தோ்தல் பணியாளா்களான சென்னை மாநகராட்சி உதவிப் பொறியாளா் செந்தில்குமாா், பணியாளா்கள் வேளாங்கண்ணி, சரவணன், மாநகராட்சி ஒப்பந்த ஊழியா் வாசுதேவன் ஆகிய 4 பேருக்கும் வேளச்சேரி போலீஸாா் விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அழைப்பாணை அனுப்பினா்.

அழைப்பாணை வாபஸ்: இந்நிலையில் 4 பேருக்கும் வழங்கப்பட்ட அழைப்பாணை திரும்பப் பெறப்பட்டது. தோ்தல் ஆணையம், இது தொடா்பான விசாரணை அறிக்கையை தில்லியில் உள்ள தலைமை தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பியதால் அழைப்பாணை திரும்பப் பெறப்பட்டதாகவும், முதல் கட்ட விசாரணையில் அலட்சியத்தாலும், கவனக்குறைவினாலும் சம்பவம் நடைபெற்றிருப்பதும், குற்றத்துக்கான முகாந்திரம் இல்லை என்பதாலும் அழைப்பாணை திரும்பப் பெறப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT