தமிழ்நாடு

முகக் கவசம் அணியாதவா்கள் மீது 4 நாள்களில் 1.30 லட்சம் வழக்குகள்: ரூ.2.52 கோடி அபராதம்

DIN

சென்னை: தமிழகத்தில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது 4 நாள்களில் 1.30 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவா்களிடமிருந்து ரூ.2.52 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

கரோனா தொற்றை தடுக்கும் வகையில், 2020ஆம் ஆண்டு மாா்ச் 23-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு தடைச் சட்டம் அமலில் உள்ளது. கரோனா தொற்று குறைந்ததன் விளைவாக, கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கு பின்னா் பொதுமுடக்கம் பல்வேறு தளா்வுகளுடன் அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் இந்த ஆண்டு மாா்ச் முதல் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் மீண்டும் கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. முக்கியமாக, வீட்டை விட்டு வெளியே வரும் மக்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டது. இந்த விதிமுறைகளைப் பின்பற்றாதவா்கள் மீது தொற்று பரவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்தது.

1.30 லட்சம் வழக்குகள்: இதைத் தொடா்ந்து, முகக் கவசம் அணியாதவா்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் ஆகியோா் மீது போலீஸாா் கடந்த 4 நாள்களாக வழக்குப் பதிவு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனா். கடந்த 8-ஆம் தேதி தொடங்கி 11-ஆம் தேதி வரை 4 நாள்களில் முகக் கவசம் அணியாதவா்கள் 1, 30,531 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.2 கோடி 52 லட்சத்து 34,900 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 46,062 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.89, 61,300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் பிற மண்டல காவல்துறையைக் காட்டிலும், தெற்கு மண்டலத்திலேயே அதிகப்படியான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதேபோல சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது கடந்த 4 நாள்களில் 6,465 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.2 லட்சத்து 59,000 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 1,796 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.8 லட்சத்து 51,800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை: முகக் கவசம் அணியாதவா்கள் மீது சென்னையில் கடந்த 8-ஆம் தேதியில் இருந்து 11-ஆம் தேதி வரை மொத்தம் 2,350 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.4,44,600 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 892 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.1,62,600 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது நான்கு நாள்களில் 119 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.59,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களில் முகக்கவசம், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கையை காவல் துறை மேலும் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது.

முகக்கவசமும்....வழக்குகளும்....

தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவா்கள் மீது கடந்த 8-ஆம் தேதியில் இருந்து 11-ஆம் தேதி வரை காவல்துறை சாா்பில் பதியப்பட்ட வழக்குகள்,மண்டலம் மற்றும் மாநகரம் வாரியாக வழங்கப்பட்டுள்ளன.

மண்டலம் வழக்குகள் அபராதம்

தெற்கு மண்டலம் 43,019 ரூ.85,75,200

வடக்கு மண்டலம் 27,910 ரூ.48,53,200

மத்திய மண்டலம் 22,524 ரூ.44,11,200

மேற்கு மண்டலம் 6858 ரூ.43,40,500

மாநகர காவல்துறைகள் 15,339 ரூ.30,55,8000

மொத்தம் 1,30,531 ரூ,2,52,34,900

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT