தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

13th Apr 2021 07:17 AM

ADVERTISEMENT


சென்னை: தமிழகத்தில அடுத்த 3 மணி நேரத்தில் மதுரை, நெல்லை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களை ஒட்டி வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தென்தமிழக மாவட்டங்களான குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

Tags : rain tn rain IMD
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT