தமிழ்நாடு

வேளச்சேரி வாக்குச் சாவடிக்கு மறுவாக்குப் பதிவு

13th Apr 2021 09:49 PM

ADVERTISEMENT


வேளச்சேரியில் சர்ச்சைக்குரிய வாக்குச் சாவடிக்கு ஏப்ரல் 17-ம் தேதி மறுவாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சென்னை வேளச்சேரி சட்டப்பேரவைத் தொகுதியில் அக்ஷயா பள்ளி மையத்தில் 92-வது வாக்குச் சாவடியில் பயன்படுத்தப்பட்ட வாக்கு இயந்திரம் இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது சர்ச்சைக்குள்ளானது. அந்த இயந்திரத்தில் 15 வாக்குகள் செலுத்தப்பட்டிருந்தன.

இதுதொடர்பாக, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், வேளச்சேரி தொகுதி தேர்தல் பார்வையாளரும் தனித்தனியே அறிக்கைகளை அளித்தனர். இவை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிலையில் வேளச்சேரி 92-வது வாக்குச் சாவடிக்கு ஏப்ரல் 17-ம் தேதி மறுவாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

Tags : TN Election
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT