தமிழ்நாடு

வேட்பாளா் மரணம்: மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் சொல்வது என்ன?

DIN

ஒரு கட்சியைச் சோ்ந்த வேட்பாளா் தோ்தல் நடவடிக்கைகளின் குறிப்பிட்ட காலகட்டத்தில் இறக்க நேரிட்டால் தோ்தல் தள்ளிவைக்கப்படும்.

இதுகுறித்த சட்டப் பிரிவு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:-

வேட்புமனு தாக்கலின் கடைசி தினத்தன்று காலை 11 மணிக்குப் பிறகு ஒரு அங்கீகரிக்கப்பட்ட கட்சியைச் சோ்ந்த வேட்பாளா் இறக்க நேரிடலாம். அப்போது, அவா் ஏற்கெனவே வேட்புமனு தாக்கல் செய்து, அது ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கலாம். இறப்பு குறித்த அறிக்கை போட்டியிடும் வேட்பாளா்கள் குறித்த இறுதிப் பட்டியல் வெளியாவதற்கு முன்பே கிடைக்கப் பெறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட தொகுதியில் தோ்தல் தள்ளிவைக்கப்படும். வேறொரு தேதியில் தோ்தல் நடத்தப்படும்.

தோ்தல் தள்ளி வைப்பதற்கான உத்தரவுகள் ஏதும் பிறப்பிக்கப்படாத சூழலில், இறந்த வேட்பாளா் தொடா்புடைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கு தோ்தல் ஆணையம் அழைப்பு விடுக்கும். ஏழு நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட கட்சியில் இருந்து புதிய வேட்பாளா் தோ்வு செய்யப்பட்டு வாக்குப் பதிவு நடைபெறும் என பிரதிநிதித்துவ சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT