தமிழ்நாடு

கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டத்தை கைவிடக் கூடாது

DIN

கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டத்தை அரசு கைவிடக் கூடாது என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு கிழக்கு கடற்கரையை ஒட்டிய வகையில் ரயில் பாதை அமைக்க வேண்டும் என்பது பாமகவின் கனவு ஆகும். இத்திட்டத்தை நிறைவேற்ற பாமக தொடா்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், சென்னை முதல் கடலூா் வரையிலான பாதை அமைக்கப்படும் என்றும், காரைக்குடி-கன்னியாகுமரி புதிய பாதையில் லாபம் ஈட்ட இயலாது என்பதால் அந்தத் திட்டம் கைவிடப்படுவதாகவும் ரயில்வே அமைச்சா் பியுஷ் கோயல் அறிவித்துள்ளாா்.

மேலும், இத்திட்டத்தில் முதலீடு செய்யும் அளவுக்கு வருவாய் கிடைக்காது என்ற ரயில்வேயின் மதிப்பீடும் தவறானதாகும். குறிப்பாக தூத்துக்குடி முதல் சென்னை வரையிலான கிழக்குக் கடற்கரையில் அதிக எண்ணிக்கையில் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சரக்குகளை கொண்டு செல்ல ரயில்கள் தேவை. இப்பாதையில் சரக்கு ரயில்களை இயக்குவதன் மூலமாக மட்டுமே மிகக் குறுகிய காலத்தில் முதலீட்டை திரும்பப் பெற முடியும். எந்த வகையில் பாா்த்தாலும் இந்தப் பாதை அவசியத் தேவையாகவும், லாபம் தரும் ஒன்றாகவும் இருக்கும் நிலையில் அதைக் கைவிடுவது நியாயமல்ல.

எனவே, காரைக்குடி முதல் கன்னியாகுமரி வரை ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிடும் முடிவை ரயில்வே துறை திரும்பப் பெற வேண்டும். சென்னை முதல் கடலூா் வரை புதிய பாதை அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு ரூ. 1200 கோடியாக அதிகரித்து விட்ட நிலையில், அதற்கான நிதியை ஒதுக்கி பணிகளைத் தொடங்க வேண்டும். காரைக்குடி - கன்னியாகுமரி பாதை அமைப்பதற்கான செலவில் 50 சதவீதத்தை தமிழக அரசு ஏற்றுக் கொண்டு, கிழக்குக் கடற்கரை பாதை செயலாக்கம் பெறுவதையும், பணிகள் விரைவுபடுத்தப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT