தமிழ்நாடு

மதுரையில் கரோனா 2-வது அலை தீவிரம்: கண்காணிப்பு அலுவலர் எச்சரிக்கை

DIN

மதுரை மாவட்டத்தில் கரோனா பரவலின் 2-ஆவது அலை தீவிரமாக உள்ளதாக கரோனா தடுப்புப் பணிக்கான கண்காணிப்பு அலுவலர் எஸ் சந்திரமோகன் கூறினார்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதாரம், வருவாய். காவல், ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. கண்காணிப்பு அலுவலர் எஸ்சந்திரமோகன் தலைமை வகித்தார். 

மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன், மாநகரக் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, மதுரை மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன், அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையர் சங்குமணி உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

பின்னர் கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன் செய்தியாளர்களிடம் கூறியது:

மதுரையில் கரோனா இரண்டாம் அலை  தீவிரமாக இருக்கிறது. முதல் அலையைக்காட்டிலும் தொற்று பரவலின் வேகம் அதிதீவிரம் அடைந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட அளவில் செயல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி காய்ச்சல் முகாம்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது காய்ச்சல் முகாம்களில் உறுதி செய்யப்பட்டவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு அவரைச் சார்ந்தவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தவிர மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதியில் கரோனா சிகிச்சை மையம் தயார் செய்யப்பட்டுள்ளது. அரசு, தனியார் மருத்துவமனைகளில் 25 சதவீத படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் உள்ளனர். மருந்து மாத்திரைகள் ஆக்சிசன் போன்றவை போதுமான அளவுக்கு உள்ளன . இரண்டாவது அலை கரோனா வைரஸ் உருமாறியுள்ளனவா என்பதை உறுதி செய்வதற்கு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

முகக்கவசம் அணியாத, சமூக இடைவெளி பின்பற்றாத நபர்களிடம் இருந்து மதுரையில் கடந்த 11 நாள்களில் ரூ.8 லட்சத்து 75ஆயிரத்து 600 வசூலிக்கப்பட்டுள்ளது. ஆகவே, பொதுமக்கள் அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். வீட்டிலிருந்து வெளியில் வரும்போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT