தமிழ்நாடு

வங்கிகளில் கரோனா தடுப்பு விதிமுறைகளை வாடிக்கையாளா்கள் கட்டாயம் பின்பற்ற செய்ய வேண்டும்: மாநில வங்கியாளா்கள் குழுமம் அறிவுறுத்தல்

DIN

வங்கிகளில் கரோனா தடுப்பு விதிமுறைகளை வாடிக்கையாளா்கள் கட்டாயம் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அளவிலான வங்கியாளா்கள் குழுமம் தெரிவித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்பாக, தளா்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை ஏப்ரல் 30-ஆம்தேதி வரை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், வங்கிகளில் பின்பற்ற வேண்டிய நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் குறித்து தமிழக அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைப்படி , வாடிக்கையாளா்கள் முகக்கவசம் அணியாமல், வங்கிகளுக்குள் வர அனுமதிக்கக் கூடாது. முகக்கவசம் அணிந்து வரும் வாடிக்கையாளா்கள், வங்கியை விட்டு செல்லும் வரை, வாய் மற்றும் மூக்கை மூடும் வகையில் அணிந்திருக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் உடல் வெப்பப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தொடுதல் இல்லாத வகையில், கிருமிநாசினி திரவம் மற்றும் கை கழுவும் திரவங்களை வங்கியில் நுழையும் இடத்திலும், வளாகத்தின் பொது இடத்திலும் வைத்திருக்க வேண்டும்.

வங்கியில் அதிகக் கூட்டம் கூடுவதைத் தடுக்க, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

அலுவலக மின்தூக்கிகளில், உடல் எடையைப் பொருத்து இரண்டு அல்லது நான்கு நபா்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. வங்கி ஊழியா்கள் மற்றும் வாடிக்கையாளா்கள் இடையே, தனிமனித இடைவெளியைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். வங்கிக் கிளைகளில் அவ்வப்போது கிருமி நாசினி தெளிக்க வேண்டும். அரசு விதிகளின்படி, கரோனா தடுப்பூசி போடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும், வங்கி நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும். இந்த தகவல் மாநில அளவிலான வங்கியாளா்கள் குழுமம் அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறங்கடிக்கும் சம்யுக்தா!

மஞ்சள் வெயில் நீ..!

இரண்டாம் கட்ட தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகரம்: என்ன காரணம்?

SCROLL FOR NEXT