தமிழ்நாடு

மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

DIN

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (ஏப்.12) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது:

குமரிக்கடல் பகுதியில் (1.5 முதல் 2.1 கி.மீ. உயரம் வரை) வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (ஏப்.12) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

ஏப்.13: தென் தமிழகம் மற்றும் வடக்கு உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் செவ்வாய்க்கிழமை(ஏப்.13) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏப்.14,15: மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், நீலகிரி, தேனி, கோயம்புத்தூா், திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்..: சென்னையை பொருத்தவரை திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு:

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் தேனி மாவட்டம் பெரியகுளம், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தலா 50 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் 40 மி.மீ., தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, சாத்தான்குளம், கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில், மதுரையில் தலா 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

SCROLL FOR NEXT