தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவு: பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்

11th Apr 2021 11:44 AM

ADVERTISEMENT


ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவிற்கு பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 
இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை சிகிச்சைப் பலனின்றி மறைந்தார் என்ற செய்தி மிகுந்த மனவேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. 

அவரது இழப்பைத் தாங்கும் மனவலிமையை எல்லாம் வல்ல இறைவன் அவரது குடும்பத்தினருக்கும், கட்சியின் தொண்டர்களுக்கும் வழங்கிடவும், அவரது ஆன்மா நற்கதியடையவும் பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார். 

Tags : Srivilliputhur Congress candidate Congress candidate
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT