தமிழ்நாடு

காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல் 

11th Apr 2021 12:15 PM

ADVERTISEMENT


ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் இரங்கல் செய்தியில், ஸ்ரீவில்லிப்புத்தூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாதவராவ் கரோனா பெருந்தொற்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார் என்ற துயரமிகு செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன். அவரது மறைவிற்கு திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ள நிலையில்  சட்டப்பேரவை உறுப்பினராக தமிழக சட்டப்பேரவைக்குள் நுழைந்திருக்க வேண்டிய அவரது திடீர் மறைவு அத்தொகுதி மக்களுக்கும் - காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். 

மேலும் பொதுவாழ்வில் இருக்கும் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். 

ADVERTISEMENT

Tags : M.K.Stalin condoles Srivilliputhur Congress candidate
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT