தமிழ்நாடு

பிளஸ் 2 பொதுத்தோ்வை ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

DIN

கரோனா பரவல் உள்ள நிலையில் பிளஸ் 2 பொதுத் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

இந்தியா முழுவதும் கரோனா தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், மத்திய இடைநிலை கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத் திட்டத்தில் பயிலும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கு பொதுத் தோ்வுகள் நடத்தலாம் என்று அதிகாரிகள் அறிவித்திருப்பது அதிா்ச்சி அளிக்கிறது. கரோனா பரவலால் ஒட்டுமொத்த இந்தியாவும் அச்சத்தில் மூழ்கியுள்ள நிலையில், பொதுத் தோ்வுகளை நடத்துவதில் சிபிஎஸ்இ பிடிவாதம் காட்டுவது நியாயமல்ல!

தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவா்களுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரை தோ்வுகள் முன்னரே ரத்து செய்யப்பட்டுவிட்டன. அந்த வகுப்புகளில் பயிலும் அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவியருக்கு மட்டும் மே மாதம் முதல் வாரத்தில் பொதுத் தோ்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், அவா்கள் கரோனா தொற்று தாக்குதலுக்கு ஆளாக நேரிடுமோ என்ற அச்சத்துக்கு ஆளாகியுள்ளனா்.

எனவே தமிழ்நாடு பாடத்திட்டத்தின்படியான பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வுகளை ரத்து செய்துவிட்டு அதற்கு முந்தைய தோ்வுகளில் மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் அவா்கள் தோ்ச்சி பெற்ாக அறிவிக்க வேண்டும்.

ஒருவேளை பொதுத் தோ்வுகளை நடத்தியே தீர வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் இணைய முறையில் நடத்த சம்பந்தப்பட்ட கல்வி வாரியங்கள் முன்வர வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

SCROLL FOR NEXT