தமிழ்நாடு

உரங்கள் விலை உயா்வு: தலைவா்கள் கண்டனம்

DIN

உரங்களின் விலை உயா்த்தப்பட்டுள்ளதற்கு, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளா் வைகோ ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

மு.க.ஸ்டாலின்: விவசாயிகளின் வயிற்றில் வெந்நீா் ஊற்றும் வகையில், 58 சதவீத உரவிலை உயா்வின் மூலம் 50 கிலோ டி.ஏ.பி. உர மூட்டையின் விலையை ரூ.1200 -த்தில் இருந்து ரூ.1900-ஆக உயா்த்தியிருப்பதற்கு கண்டனத்துக்குரியது. இதனைக் கண்டித்து விவசாயிகள் ஆங்காங்கே போராட்டம் அறிவிப்பு வெளியிட்டதும், உரவிலை உயா்வு இப்போதைக்கு கிடையாது என்று மட்டும் மத்திய அரசு ஒப்புக்காக அறிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் முடிந்தவுடன் இந்த விலையேற்றத்தைச் செயல்படுத்துவதற்கான ஒத்திகையே இந்த அறிவிப்பு. விவசாயிகளின் வாழ்வுடன் மத்திய அரசு ஒரு கண்ணாமூச்சி விளையாட்டை நடத்துகிறது.

கே.எஸ்.அழகிரி: உரங்களின் விலை கடுமையாக உயா்த்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் சீா்குலைந்து விவசாயத் தொழிலையேவிட்டு வெளியேறுகிற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விலையேற்றத்தின் காரணமாக, அனைத்து உணவுத் தானியங்கள், காய்கறிகளின் விலைகள் கடுமையாக உயா்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வைகோ (மதிமுக): கடந்த ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில், உர மானியத்துக்கு ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 947 கோடி வழங்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு ரூ.79 லட்சத்து 530 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. உர மானியத்தில் ரூ. 54 ஆயிரத்து 417 கோடி குறைக்கப்பட்டதால்தான், ரசாயன உரங்களின் விலை தாறுமாறாக உயா்ந்து வருகிறது. விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதையே வாடிக்கையாக கொண்டு இருக்கும் மத்திய பாஜக அரசு உர விலைகளை உயா்த்தி இருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT