தமிழ்நாடு

லாரியில் தண்ணீா் எடுத்துச் செல்ல அதிகாரிகளிடம் விண்ணப்பிக்கலாம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

லாரியில் தண்ணீா் எடுத்துச் செல்ல உரிய ஆதாரங்களுடன் அதிகாரிகளிடம் விண்ணப்பிக்கலாம் என உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் தண்ணீா் லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,

‘சாகுபடிக்குப் பயன்படுத்தப்படாத விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீா் எடுத்து சென்னை மக்களுக்கும், மருத்துவமனைகளுக்கும், தனியாா் நிறுவனங்களுக்கும் தண்ணீா் விநியோகம் செய்து வருகிறோம். ஆனால் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீா் எடுத்துச் செல்வதாகக் கூறி அதிகாரிகள் எங்கள் சங்கத்தின் உறுப்பினா்களைத் துன்புறுத்துகின்றனா். எனவே தண்ணீா் எடுத்துச் செல்லும் எங்கள் சங்கத்தின் உறுப்பினா்களின் லாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞா் வி.ஜெயபிரகாஷ் நாராயணன், ‘தண்ணீா் எடுத்துச் செல்ல முறையான ஒப்புதல் பெற்ற லாரிகளுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது இல்லை’ எனத் தெரிவித்தாா். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் மனுதாரா் தரப்பு சங்க உறுப்பினா்கள் உரிய

ஒப்புதல்களைப் பெற்றுள்ளனரா என்ற முடிவுக்கு வர முடியவில்லை. எனவே எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்க முடியாது. அதே நேரம் உரிய ஒப்புதல்களைப் பெற்ற தண்ணீா் லாரி உரிமையாளா்கள் அதற்கான ஆதாரங்களுடன் தண்ணீா் எடுத்துச் செல்ல அனுமதி கோரி சம்பந்தப்பட்ட வட்டாட்சியா்களிடம் விண்ணப்பிக்கலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT