தமிழ்நாடு

வெங்கல் அருகே சவுடு மண் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

DIN

வெங்கல் அருகே சவுடு மண் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்றாவது முறையாகக் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே புன்னப்பாக்கம் ஏரியில் அண்மையில் சவுடு குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்குக் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் இன்று மீண்டும் மூன்றாவது முறையாக காலை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் லாரிகளில் ஏரியிலிருந்து சவுடு மண் ஏற்றிச் செல்ல ஏற்பாடுகள் நடைபெற்றது. இது குறித்துத் தகவலறிந்த கிராம மக்கள் மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து ஏரியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களது கிராம ஏரியிலிருந்து மண் எடுக்கப்பட்டால் நிலத்தடி நீர் சரிந்து குடிநீர், விவசாயம் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக புகார் தெரிவித்தனர். ஏரியில் மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெங்கல் போலீசாரிடம் குவாரி செயல்படக் கூடாது எனப் பொதுமக்கள் தெரிவித்தனர். பொதுமக்களை ஏரியிலிருந்து கலைந்து செல்லுமாறு போலீசார் கூறியதால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் பொதுமக்கள் ஏரியிலேயே பத்தல் அமைத்து அங்கேயே இருந்து ஏரியைப் பாதுகாப்போம் என்றனர். எனினும் பந்தல் அமைக்க போலீசார் அனுமதி மறுத்த நிலையில் கொளுத்தும் வெயிலிலும் மக்கள் ஏரியிலேயே உணவு சமைத்துத் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஏரியில் குவாரி செயல்படாது என போலீசார் உத்தரவாதம் கொடுக்கும் வரை போராட்டம் நீடிக்கும் எனப் பொதுமக்கள் தெரிவித்தனர். பொதுமக்களின் போராட்டம் காரணமாக ஏரியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT