தமிழ்நாடு

மொழிப் பெயர்ப்பாளர் பணியிடங்களுக்கு தேர்வானோர் கவனத்துக்கு..

10th Apr 2021 05:56 PM

ADVERTISEMENT

 

தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் உள்ள உதவி பிரிவு அலுவலர் (மொழிப் பெயர்ப்பு) பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு குறித்து டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

அதன்படி, தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் உள்ள உதவி பிரிவு அலுவலர் (மொழிப் பெயர்ப்பு) பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 12 முதல் 22-ஆம் தேதி வரை (வேலை நாள்களில்) தங்களது மூலச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பரிவேற்றம் செய்ய வேண்டும்.

மேற்குறிப்பிட்ட நாள்களுக்குள் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவில்லை எனில் அவ்விண்ணப்பதாரர்களுக்கு தெரிவு பணிகளில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை எனக் கருதி மேற்கண்ட பதவிக்கு அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மட்டாது எனத் தெரிவிக்கப்படுவதாக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அறிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT

Tags : tnpsc tamil
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT