தமிழ்நாடு

சென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்: சென்னை மாநகராட்சி

9th Apr 2021 11:22 AM

ADVERTISEMENT


சென்னையில் பொதுமக்கள் யாரும் முகக்கவசம் அணியாமல் பொதுவிடங்களுக்கு வந்தால் அவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை உள்பட தமிழகத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு நேற்று பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், சென்னையில் பொதுமக்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், இல்லையென்றால் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னையில் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் பொதுவிடங்களுக்கு வந்தால் ரூ.200 அபராதமாக வசூலிக்கப்படும்.
 

ADVERTISEMENT

Tags : facemask chennai update
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT