தமிழ்நாடு

கரோனா எதிரொலி: புதுச்சேரியிலும் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்

9th Apr 2021 11:18 AM

ADVERTISEMENT


புதுச்சேரி: கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் இரவு நேரக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பிறப்பித்திருக்கும் புதிய உத்தரவில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், புதுச்சேரியில் அதிகளவில் மக்கள் கூட, திருவிழாக்கள் நடத்த  தடை விதிக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளார்.

மேலும், இரவு 12 மணி முதல் காலை 5 மணி வரை கரோனாவை தடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஆட்டோ  மற்றும் வாடகைக் காரில் 2 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும்.

அனைத்து நிகழ்ச்சிகளிலும் குறைந்த அளவிலான நபர்களே பங்கேற்க வேண்டும்.

ADVERTISEMENT

கோயில்களில் இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

பேருந்துகளில் அதிகளவிலான பயணிகள் அனுமதிகக்கக் கூடாது.

முகக்கவசம் அணியாமல் பொதுவிடங்களுக்கு வருவோருக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags : pondy tamilisai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT