தமிழ்நாடு

வாக்களிக்காத விஜயகாந்த்: தேமுதிகவினர் வருத்தம்

7th Apr 2021 12:12 PM

ADVERTISEMENT


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாக்களிக்காதது, அக்கட்சியினர் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு தேர்தலின்போதும், தனது குடும்பத்தாருடன் வந்து சாலிகிராமத்தில் உள்ள காவிரி உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் விஜயகாந்த் வாக்களிப்பது வழக்கம்.

ஆனால், இந்த முறை, விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மட்டும் காலையில் வந்து தனது வாக்கினை செலுத்திவிட்டு, தான் போட்டியிடும் விருத்தாச்சலத்துக்குக் கிளம்பிவிட்டார். பிறகு அவரது மகன்கள் வந்து வாக்களித்தனர். அப்போது விஜயகாந்த் மாலையில் வந்து வாக்களிப்பார் என்று கூறினர். ஆனால் கடைசி வரை அவர் வாக்களிக்க வரவில்லை.

இதையும் படிக்கலாமே.. சென்னையில் மிகக் குறைவான வாக்குகள் பதிவான 5 தொகுதிகள்

ADVERTISEMENT

உடல் நலக் குறைவு மற்றும் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் அவர் வாக்களிக்க வரவில்லை என்று கூறப்பட்டாலும், தங்களது கட்சித் தலைவர் வாக்களிக்காதது தேமுதிகவினருக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கியது. தமிழகத்தின் அநேக வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். வெயில் சுட்டெரிக்கும் என்ற எண்ணத்தில், வாக்காளா்கள் அதிகளவு திரண்டு வந்து தங்களது வாக்குகளைச் செலுத்தினா்.

இதையும் படிக்கலாமே.. தமிழகப் பேரவைத் தேர்தலில் 72.78% வாக்குப்பதிவு: சத்யபிரத சாஹு

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் 72.78 சதவீ வாக்குகள் பதிவானதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு அதிகாரப்பூர்வமாக இன்று தெரிவித்தாா்.

நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின் போது கோளாறு காரணமாக 100-க்கும் மேற்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டன. முதல் முறையாக சட்டப்பேரவைத் தோ்தலில் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பயன்படுத்தப்பட்டன.
 

Tags : vijayakanth DMDK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT