தமிழ்நாடு

கிராம பகுதியில் புகுந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்

7th Apr 2021 12:01 PM

ADVERTISEMENT


பென்னாகரம்: ஏரியூர் அருகே கிராம பகுதியில் ஒரு வார காலமாக சுற்றி திரிந்த ஒற்றை யானையை மயக்க ஊசி செலுத்தி 3 மணி நேர போராட்டத்திற்கு பின்பு வனத்துறையினர் பிடித்தனர்.

பென்னாகரம் அருகே பதனவாடி காப்புக் காடு பகுதிகளில் 10 மேற்பட்ட யானைகள் கூட்டம் கூட்டமாக வனப்பகுதியில் சுற்றி திரிகின்றன. கோடை காலத்திற்கு முன்பே கடும் வறட்சி நிலவுவதால்,பதனவாடி காப்பு காட்டில் இருந்து கடந்த சில நாள்களுக்கு முன்பு, வனப்பகுதியை ஒட்டியுள்ள நெருப்பூர் காந்தி நகர் கிராம பகுதிக்குள் உணவு மற்றும் தண்ணீர்  நுழைந்து வந்தது. அன்மையில் வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டப்பட்ட நிலையில் மீண்டும் கிராம பகுதிக்குள் நுழைந்தது. 

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார், பென்னாகரம் வனச்சரக அலுவலர் முருகன் கால்நடை மருத்துவர் பிரகாஷ் மற்றும் வனத்துறையினர் கொண்ட குழுவினர் நிகழ்வு இடத்திற்கு சென்று கிராமத்திற்குள் சுற்றித்திரிந்த யானையை முத்தையன் கோவில் தடுப்பணை வனப்பகுதியில் விரட்டி, மயக்க ஊசி செலுத்தினர். அதன் பின்பு மயக்க நிலையில் இருந்த யானையை மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஜேசிபி இயந்திரத்தின் உதவியால் கனரக வாகனத்தில் ஏற்பட்டது. 

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் கூறியதாவது: பென்னாகரம் வனப்பகுதியில் உட்பட்ட நெருப்பூர் பகுதிக்குள் நுழைந்த ஒற்றை ஆண் யானை விளைநிலங்களை சேதப்படுத்தியும் மனித உயிர்களை காக்கும் நிலை ஏற்பட்டதால், யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. இந்தநிலையில்  பிடிக்கப்பட்ட ஒற்றை யானையை வனப்பகுதியில் விடப்படுதாக தெரிவித்தார்.

ADVERTISEMENT

Tags : elephant rural area foresters
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT