தமிழ்நாடு

மு.க.தமிழரசுக்கு கரோனா தொற்று

7th Apr 2021 04:42 AM

ADVERTISEMENT

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தம்பியுமான மு.க.தமிழரசு கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி உள்பட சென்னையில் பல்வேறு தொகுதிகளில் மு.க.தமிழரசு பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
 இந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு கரோனா அறிகுறி தெரிய மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டார்.
 இதில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கெனவே, கருணாநிதியின் மகளும், நாடாளுமன்ற திமுக குழுத் துணைத் தலைவருமான கனிமொழி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
 
 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT