தமிழ்நாடு

ராணிப்பேட்டை அருகே தேர்தலைப் புறக்கணிக்க போவதாக கூறி கிராம மக்கள் சாலை மறியல்

1st Apr 2021 12:41 PM

ADVERTISEMENT


ராணிப்பேட்டை அருகே  தனியார் தொழிற்சாலையை மூட வலியுறுத்தி தேர்தலைப் புறக்கணிக்க போவதாக கூறி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம் கத்தாரி குப்பம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பழைய டயர் மூலப்பொருளில் இருந்து ரசாயனம் பிரித்தெடுக்கும் தனியார் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் ரசாயன புகை மாசு ஏற்படுத்துவதாகவும், மேலும் விவசாய விளை நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி தொழிற்சாலையை மூட வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில் கிராம மக்கள் தனியாருக்கு சொந்தமான ஆலையை மூட வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது தனியார் தொழிற் சாலையை நிரந்தரமாக மூட வில்லை என்றால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் தெரிவித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மறியல் போராட்டம் காரணமாக ராணிப்பேட்டை பொன்னை பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : Villagers road block Ranipettai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT