தமிழ்நாடு

அஞ்சல் வாக்களித்த 102 வயது முதியவர்!

1st Apr 2021 04:56 AM

ADVERTISEMENT

 


திருச்சி: சுதந்திர இந்தியாவில் தனது 33 ஆவது வாக்கை  தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திருச்சியைச் சேர்ந்த முதியவர் அஞ்சல் முறையில் அளித்தார்.
தமிழக பேரவைத் தேர்தலையொட்டி அஞ்சல் மூலம் வாக்களிக்கும் வாய்ப்பை தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், பணியாளர்கள், காவலர்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய முயற்சியாக முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் அஞ்சலில்  வாக்களிக்கவும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. 
இந்த நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதி மேலகல்கண்டார் கோட்டை விவேகானந்தா நகர் அல்லி தெருவில் வசித்து வரும் 102 வயதான மைக்கேல் அஞ்சல் முறையில் வாக்களித்தார்.
இவரின் மனைவி இறந்துவிட்டார். பொன்மலை ரயில்வே பணிமனையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள், 8 பேரப்பிள்ளைகளும், 7 கொள்ளு பேரப்பிள்ளைகளும் உள்ளனர். 
இவர் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே 1946 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாணத் தேர்தலில் வாக்களித்துள்ளார்.   அதன் பின்னர் 1947 இல் சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர் தமிழகத்தில் நடைபெற்ற  சட்டப்பேரவைக்கான 15 தேர்தல் மற்றும் 17  எம்பி தேர்தல்களிலும் வாக்களித்துள்ளார்.  இவரின் வீட்டுக்குச் சென்ற தேர்தல் அலுவலர்கள் அவரின் அஞ்சல் வாக்கை 
பெற்று வந்துள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT