தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 2,817 பேருக்கு கரோனா 

1st Apr 2021 07:36 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் மேலும் 2,817 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இது குறித்து சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் இன்று 2,817 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8,89,490 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 1,634 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், வீடு திரும்பியவா்களின் எண்ணிக்கை  8,59,709 ஆக உள்ளது. பாதிக்கப்பட்டவா்களில் இன்று 19 போ் உயிரிழந்துள்ளனா். 
அவா்களில் 10 போ் தனியாா் மருத்துவமனையிலும், 8 போ் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனா். இதனால், தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு 12,738 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 17,043 போ் சிகிச்சையில் உள்ளனா். சென்னையில் இன்று 1,083 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் சென்னையில் கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 6,695 ஆக உயா்ந்துள்ளது. 
இன்று மட்டும் 85,876 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT