மதுரை: மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் அதிமுக-பாஜக தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசுகிறார். இந்தக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். இதற்காக, பிரதமர் வியாழக்கிழமை இரவு மதுரைக்கு வருகிறார்.
மதுரையில் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
இந்தப் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர், வியாழக்கிழமை இரவே மதுரைக்கு வருகிறார். இங்கு இரவு தங்கும் பிரதமர், வெள்ளிக்கிழமை காலை 11.30 முதல் 12.30 வரை பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
பின்னர் நாகர்கோவிலில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்துக்குப் புறப்பட்டு செல்கிறார்.
மதுரையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்துக்காக, சுற்றுச்சாலையில் மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பிரதமரின் பாதுகாப்புக்காக மதுரை வந்துள்ள மத்திய பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மேடையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.