தமிழ்நாடு

பொதுமக்கள், போக்குவரத்துக்கு தடையின்றி தேர்தல் பிரசாரம் செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

1st Apr 2021 12:13 PM

ADVERTISEMENT


சென்னை: பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் தடை செய்யாமல் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரம் செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் எம். ஞானசேகர் தாக்கல் செய்த மனுவில், சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, அமைச்சர்கள் பொதுக்கூட்டம் மற்றும் கூட்டங்களுக்கு செல்லும் இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பொதுமக்கள் நடமாட்டம் தடுக்கப்படுகிறது. கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க பள்ளி, கல்லூரிகள், நீதிமன்றம் ஆகியவற்றில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், மதுபானக்கடை, திரையரங்கம், வணிக வளாகங்கள் ஆகியவற்றில் மக்கள் கூடுகின்றனர். அதேபோல பிரசார கூட்டங்களிலும் கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் ஒன்று கூடி வருகின்றனர். எனவே, பொதுமக்கள், போக்குவரத்தைத் தடுத்து நிறுத்தாமல் பிரசாரங்களை மேற்கொள்ள அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வில் வழக்குரைஞர் ஞானசேகர் முறையீடு செய்தார். அவரது முறையீட்டை ஏற்ற நீதிமன்றம், வியாழக்கிழமை மதியம் விசாரிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளது.

ADVERTISEMENT

Tags : High Court Petition
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT