தமிழ்நாடு

ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது: கே. பாலகிருஷ்ணன் வாழ்த்து

1st Apr 2021 05:27 PM

ADVERTISEMENT

தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்திய திரைப்படத் துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது 2020ம் ஆண்டிற்கு ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது; தனது உளமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

ரஜினிகாந்த் 45 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகராக திரையுலகில் முத்திரை பதித்தவர். தனக்கென தனி பாணியை உருவாக்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்றவர். இந்த விருது அவரது கடின உழைப்புக்கும், திறமைக்கும் கிடைத்த அங்கீகாரமாகும்.

தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் இன்னும் பல விருதுகளை அவர் பெற்றிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விழைகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

ADVERTISEMENT

Tags : rajini
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT