தமிழ்நாடு

புதுச்சேரி வாக்காளர்களின் செல்போன் எண்கள் கசிந்தது எப்படி? விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 

1st Apr 2021 05:04 PM

ADVERTISEMENT

புதுச்சேரி வாக்காளர்களின் செல்போன் எண்கள் கசிந்தது எப்படி? என்பது குறித்து விளக்கம் அளிக்க ஆதார் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைவர் ஆனந்த் தாக்கல் செய்த மனுவில், புதுச்சேரிக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.  
இந்த நிலையில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியினர் தொகுதி வாரியாக கட்செவி குழுக்களைத் தொடங்கி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். பொதுவாக வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் மட்டுமே இருக்கும். 
அதில் செல்லிடப்பேசி எண்கள் இருக்காது. இந்த நிலையில் ஆதார் ஆணையத்தில் இருந்து வாக்காளர்களின் செல்லிடப்பேசி எண்களை பெற்று கட்செவி குழுவைத் தொடங்கி பாஜகவினர் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். 
இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 
அப்போது புதுச்சேரி வாக்காளர்களின் செல்போன் எண்கள் கசிந்தது எப்படி? கேள்வி எழுப்பிய நீதிமன்றம் வீடு வீடாக சென்று விவரங்களை சேகரித்ததாக என்கிற பாஜக தரப்பு வாதத்தை ஏற்க மறுத்துவிட்டது. மேலும் இதுதொடர்பாக 6 வாரத்தில் விளக்கம் அளிக்க ஆதார் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

Tags : high court
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT